தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் ஆய்வு செய்தார். ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படு கின்றதா? வளர்ச்சி பணிகள் முறையாக மேற்கொள்ளப் படுகின்றதா? பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சிவகிரி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.