இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மற்றும் சிவனடியார் கள் சார்பாக அதன் தென்காசி மாவட்ட தலைவர் சிவபால சுப்பிரமணியன் நேற்று
தென்காசி மாவட்டம் ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில் தென்காசி உலகம்மை உடனுறை காசி விசுவநாதர் கோவில் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக கிரில் கேட் மூலம் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கோயிலின் இயற்கை அழகு பாதிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. கோயில் நிர்வாக அதிகாரியின் தன்னிச்சையான இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் 63 நாயன்மார் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் செண்பக ராமன், இந்த ஆலய பாதுகாப்பு இயக்கம் தென்காசி கோயில் அமைப்பாளர் செந்தில்குமரன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், இந்து முன்னணி தென்காசி நகர செயலாளர் மா. நம்பிராஜன் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.