தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை முன்பு அமைந்துள்ள உயர்மின் கோபுர மின் விளக்கு 9 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டதை திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. சங்கரன்கோவில் மதிமுக நகர செயலாளர் ரத்தினகுமார்,
திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சி மற்றும்
திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.