மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்ற வருகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டணத்தை பதிவு செய்தனர்