தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

62பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்ட நிர்வாக குழு கூட்டம்
கடையநல்லூர் ஜூலை 27 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் கடையநல்லூர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன் பொருளாளர் அன்வர் சாதிக் துணைத் தலைவர் அப்துல் பாசித் துணை செயலாளர் முஹம்மதலி பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்துள்ள அழகிய முன்மாதிரி இப்ராஹிம் நபி என்கிற 10 மாத கால செயல் திட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்வது எனவும் இஸ்லாமியரிடையே புகுத்தப்பட்டுள்ள மெளலூது போன்ற வழிகேடுகளை இஸ்லாமிய சமுகத்திலிருந்து களையும் வகையிலும் அதை ஊக்குவிக்கும் போலி மதகுருமார்களை அடையாளப்படுத்தும் விதமாகவும் வீரியமான கள பிரச்சாரத்தை முன்னெடுப்பது எனவும்

மது ,போதை , வட்டி ,விபச்சாரம் போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராகவும் தொடர் பிரச்சாரத்தை இளைஞர்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வது எனவும் இது குறித்து மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டம், பொது கூட்டம் உள்ளிட்டவை நடத்துவது

கடையநல்லூர் நகராட்சியில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோஸ்டி பூசலால் கடந்த ஆறு மாதங்களாக நகராட்சி நிர்வாகக் கூட்டம் நடைபெறவில்லை இதை தமிழ்நாடு அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் கடையநல்லூர் நகராட்சியில் செயல்படுத்தாமல் இருக்கும் திட்டப் பணிகள் மற்றும் நகராட்சி அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்படுத்த வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்கிற தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிர்வாக குழு கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன் ,அப்துல் பாசித் ,செய்யதலி , பீர் முஹம்மது , மருத்துவ அணி செயலர் குட்டி அப்துல்லாஹ், மாணவரணி செயலர் ரபிக் ராஜா தொண்டரணி செயலர் தாவூத் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி