தென்காசி முன்னாள் மாவட்ட திமுக செயலாளருக்கு பொதுமக்கள் நன்றி

81பார்த்தது
தென்காசி முன்னாள் மாவட்ட திமுக செயலாளருக்கு பொதுமக்கள் நன்றி
தென்காசி சட்டமன்ற தொகுதி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், வீரகேரளம்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ராமனூர், கலிங்கப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி செல்லும்மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வசதி இன்றி இருந்து வந்தது.  

எனவே மாணவர்களின் நலன் கருதி, சுரண்டையில் இருந்து வீ. கே. புதூர் வரை செல்லும் தடம் எண் 25 எச் என்ற பேருந்தை  சுரண்டையில் இருந்து கலிங்கப்பட்டி , ராமனூர், அதிசயபுரம் விலக்கு, ராஜகோபாலபேரி விலக்கு வழியாக வீ. கே. புதூருக்கும்,

மறு வழித்தடத்தில் வீ. கே. புதூரில் இருந்து ராஜகோபாலப்பேரி விலக்கு, ராமனூர், கலிங்கப்பட்டி வழியாக சுரண்டை செல்லும் படி இயக்கிட வேண்டும் எனக்கோரி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும்,  மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையிலும் கலிங்கப்பட்டி ராமனூர் வழியாக தற்போது தமிழக அரசு உத்தரவின் பேரில், கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதனை ராமனூர், கலிங்கப்பட்டி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி