தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு அய்வாய்புலிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த கட்டிடமானது கட்டி 60 ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து மோசமான நிலையில் உள்ளதாகவும் மழை பெய்தால் ஓடுகளில் உள்ள ஓட்டை வழியாக தண்ணீர் வகுப்பறைக்குள் வருவதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள் அவ்வப்போது பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ சத்துகள் உள்ளே வருவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் அரசு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் முன்பு ஒன்று திரண்டு கோரிக்கை வைத்தனர்.
மேலும் இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.