மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7. 60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

54பார்த்தது
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7. 60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக் கடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடா்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய ஊனமுற்றோா் நிதி வளா்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், ஆட்சியா் ஏ. கே. கமல் கிஷோா் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில் 62 மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முகாமில், 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7. 60 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வாகனங்களை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், மாவட்ட தொழில் மைய மாவட்ட மேலாளா் மாரியம்மாள், முன்னோடி வங்கி அலுவலா் இசக்கிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி