இன்று வெப்பநிலை உச்சம் தொடும் - வானிலை மையம்

26227பார்த்தது
இன்று வெப்பநிலை உச்சம் தொடும் - வானிலை மையம்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். மதிய நேரத்தில் குழந்தைகளையும், முதியோர்களையும் வீட்டை விட்டு தனியே வெளியே அனுப்பாதீர்கள். நீர்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்ளவும். பருத்தியிலான ஆடைகளை அணிவது நலம்.

தொடர்புடைய செய்தி