தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.15) முதல் மார்ச் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மார்ச் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.