இளைஞர்கள் உயிரை பறிகொடுத்தாலும் செல்ஃபி மோகத்தை நிறுத்துவதில்லை. சமீபத்தில் மெக்சிகோவின் ஹிடால்கோ அருகே நீராவியில் இயங்கும் ரயிலைக் காண இளைஞர்கள் குவிந்தனர். இதனிடையே இளம்பெண் ஒருவர் தண்டவாளத்திற்கு அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ரயிலில் மோதி இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயிலின் இஞ்ஜின் பகுதி தலையில் தட்டி சம்பவ இடத்திலேயே அப்பெண் சுருண்டு விழுந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.