பீகார்: அவினாஷ் என்பவர் குஞ்சன் என்ற பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவினாஷுக்கு அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்த நிலையில் குஞ்சனுடனான காதலை கைவிட்டார். நேற்று (டிச. 14) அவினாஷை சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று குஞ்சனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் தான் குஞ்சனை காதலிக்கவில்லை எனவும் தனக்கு நியாயம் வேண்டும் என்றும் அவினாஷ் போலீஸ் புகார் அளித்துள்ளார்.