சமீப காலமாக திடீர் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் பீடில் உள்ள பாபாசாகேப் மிசல் என்ற ஆசிரியர் வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு புறப்பட்டார். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். உடனே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.