திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆங்கில ஆசிரியர் சேரன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் மீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் சேரனை போளூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.