திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டினை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில சிறப்பு உணவுகளை டயடில் சேர்ப்பதன் மூலம் ஆண்மை பிரச்சனை நீங்கும். பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். பேரீச்சம்பழம், வயாகராவிற்கு இணையாக செயல்படும் மாதுளை, நெல்லிக்காய் ஆகியவை பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.