ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீஸ், ரஷ்யாவைச் சேர்ந்த டாரியா கசட்கினா உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கீஸ் 6-1 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து, அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதவுள்ளார்.