ஒடிசாவில் உயிரிழந்த தமிழன்.. தாய் பரிதவிப்பு

61பார்த்தது
ஒடிசாவில் உயிரிழந்த தமிழன்.. தாய் பரிதவிப்பு
கோபிசெட்டிபாளையம் கூகலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேவராஜ் (31) ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், கோயிலுக்கு வெளியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தேவராஜின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, தனியார் ஆம்புலன்ஸ்கள் ரூ.1 லட்சம் வரை பணம் கேட்பதால் தேவராஜின் தாயார் செய்வதறியாது திகைத்துபோயுள்ளார். கணவரும் இல்லாத சுழலில் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர், கோபிசெட்டிப்பாளையம் கோட்டாட்சியரிடம் உதவிகோரி மனு அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி