திருப்பூரில் வடமாநில தொழிலாளி கொலை - தொழிலாளர்கள் போராட்டம்

50பார்த்தது
திருப்பூரில் வடமாநில தொழிலாளி கொலை - தொழிலாளர்கள் போராட்டம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரிடம் நேற்று இரவு (மே 14) அடையாளம் தெரியாத மூன்று பேர் செல்போன் பறிக்க முயன்றனர். அப்போது, அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (மே 15) ஆகாஷை கொலை செய்த மூவரை கைது செய்யக்கோரி புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி