அய்யாகண்ணுவுக்கு இங்கு என்ன வேலை? - உச்ச நீதிமன்றம் கேள்வி

74பார்த்தது
அய்யாகண்ணுவுக்கு இங்கு என்ன வேலை? - உச்ச நீதிமன்றம் கேள்வி
உ.பி., வாரணாசியில் போட்டியிடும் பிரதமருக்கு எதிராக போட்டியிடவிடாமல் போலீஸ் தடுப்பதாகவும், தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரியும் அய்யாகண்ணு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து இன்று (மே 15) நடந்த விசாரணையில், “தமிழ்நாட்டில் உள்ள அய்யாகண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? இங்கு உங்களுக்கு யார் ஓட்டுப் போடுவார்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “சமூக ஆர்வலர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள்” என்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி