செங்கல்பட்டு: அச்சரபாக்கத்தில் அமைந்துள்ள நடுபழனி முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. காஞ்சி பெரியவர் ஒருமுறை இங்கு வரும்போது, ஆலயத்தில் முருகப் பெருமான், பழனியிலுள்ள தண்டாயுதபாணியாகவே காட்சி கொடுக்க, இத்தலத்தை "நடு பழனி" என்ற நாமகரணமிட்டு அழைத்தார். மலேசியா பத்துமலை முருகனைப் போலவே இக்கோயிலில் உள்ள முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் விரைவில் தடையின்றி நடக்க முருகன் அருள்பாலிக்கிறார்.