பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும்: வைகோ

61பார்த்தது
பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும்: வைகோ
பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்புக்கு பின்னராவது ஆளுநர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்க வேண்டும். புயல் மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு கோரிய நிதியை , மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்றார்.