சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கிமீ பயணிக்கிறது. இந்நிலையில் பேருந்துகளின் பக்கவாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் 1,315 பேருந்துகளின் கீழ் இரு புற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.