"9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடரச் செய்வது சவாலானது” என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியின்
சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கலாம். ஆனால், நாளை அவர்கள் எங்களை ஆதரிப்பார்கள். அவர்கள் எங்களுடன் இணையலாம் என அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் 21 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) போட்டியிட்டது. அதில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.