பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொது செயலாளர் பழனிசாமி

82பார்த்தது
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொது செயலாளர் பழனிசாமி
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 1 தொகுதியைக் கூட பெற முடியாமல் போனது. 2024-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதன்முறையாக பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி