இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1967ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் சூட்ட தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18ஐ தமிழர்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பகிர்ந்திருக்கிறார். திமுக அரசு வந்த பிறகு தான் தமிழ்நாட்டிற்கு பெயர் மாற்றம் வர வேண்டும் என இருக்கிறது என்று அண்ணா பேசும் அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.