தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி

58பார்த்தது
தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது. சிண்டிகேட் மீண்டும் கூடி முடிவு எடுக்கும் வரை தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ.1000-லிருந்து, 1500 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி