கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

57பார்த்தது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி