சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் "கங்குவா". தமிழ் மட்டுமல்லாமல் சுமார் 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ம் தேதி, கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், அக்டோபர் மாதம் 10ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக மீண்டும் ஒரு ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.