பாஜக விளம்பர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

81பார்த்தது
பாஜக விளம்பர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் விளம்பரத்தை பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும் பாஜகவின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி