தென்காசி, செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்த விபத்தில் 12ஆம் வகுப்பு மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக 3 மாணவிகள் தென்காசி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கோட்டைபோலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.