நொய்டாவில் நாலெட்ஜ் பார்க்கில் உள்ள கல்லூரியில் இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மாணவி மற்றொரு மாணவியை அடித்து கீழே தள்ளி மீண்டும் தாக்க தொடங்குகிறார். முதலில் இதனை யாரும் தடுக்காமல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். பின்னர் இரண்டு மாணவிகள் வந்து சண்டையை தடுக்க முயற்சித்தனர். விசாரணையில் தனிப்பட்ட முன்விரோதமே இந்த சண்டைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.