இரவில் எரியும் தெரு விளக்குகள் நமது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? தெரு விளக்குகளின் பிரகாசமான ஒளி நம் உடலின் பயாலஜிகல் கிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரத்தை சீர்குலைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் மூளை பக்கவாதம், உடலில் மெலடோனின் உற்பத்தி குறைவு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர். இரவில் அதிக வெளிச்சத்தில் இருந்தால் 43% பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.