விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்டாச்சியர் அலுவலகம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது, திடீரென பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக படிக்கட்டில் நின்று பயணிகள் யாரும் பயணம் செய்யாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளை இறக்கி விட்டு திரும்பும் வழியில் படிக்கட்டை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் எடுத்துச் சென்றனர்.