நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை தடை செய்யக் கோரியும், விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடல்களை பாடியுள்ளார். மேலும் “ரத்தம் பத்தட்டும் விசில் போடு..” என இளைஞர்களிடையே ரத்த வெறியை தூண்டும் வகையில் என அவர் செயல்பட்டு வருகிறார்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.