ரோபோவிடம் ஜோசியம் கேட்ட தமிழிசை

30311பார்த்தது
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் தனது வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தமிழிசை ரோபோவிடம் கேட்டார். அதற்கு ரோபோ கூறுகையில், தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதை தரமுடியும் என நம்புகிறார்கள்; நிச்சம் வெற்றி பெறுவீர்கள்.. வாழ்த்துகள்... தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி.. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி.. என்று கூறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி