ஐபிஎல் போட்டிகளின்போது எச்சில் தடவ விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை நடப்பு தொடருக்கு பிசிசிஐ நீக்கியுள்ளது. மேலும், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால், 2 பந்துகளை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11 ஆவது ஓவருக்கு பிறகு புதிய பந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.