ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

78பார்த்தது
ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள ராகு, கேது பரிகார ஸ்தலத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை ராகுகால பூஜை நடைபெற்றது. இதில் ராகு, கேது பகவான்களுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி