காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. புத்தக வெளியீட்டாளர்களான ஹார்பர்காலின்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சுயசரிதை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சோனியா காந்தியும் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த புத்தகத்தை இந்தியாவில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியிடவுள்ளது.