சூரியன், சந்திரன், கேது, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் கன்னி ராசியில் ஒன்று சேர்கின்றன. சந்திரன் கன்னி ராசியின் அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படும். எனவே கன்னி ராசிக்காரர்கள் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று விடலை தேங்காய் விட்டு வழிபடுவது சிறப்பு. கோயில்களில் இருக்கும் யானை அல்லது பசுவுக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து வருவது கிரகணத்தால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும்.