சிவகார்த்தியேன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட "அமரன்" படக்குழுவினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமரன் படம் வெற்றி பெற்றது தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளார். தேசப்பற்றோடு மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்கியதற்காகவும் நமது தேச மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படம் அமைந்ததாலும் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.