தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பதவி
ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் கட்சியில் பதவி பறிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளராகவும். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியில் கலந்து கொண்டமைக்காக வருத்தம் தெரிவித்து தளவாய் சுந்தரம் விளக்கம் அளித்ததன் அடிப்படையில் மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது.