சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக கட்டப்பட்ட 3. 5 கோடி ரூபாய் மதிப்புள்ளான ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில் தமிழக அரசு அனைவருக்குமான அரசு, அனைவரையும் சமமாக பாவிக்கின்றது. புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பங்கேற்காமல் புறக்கணித்தது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் அமைச்சர் சென்றவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊராட்சி ஒன்றிய குழு தலைவி திவ்யா பிரபு பேசுகையில், தான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அரசு நிதி எதுவும் ஒதுக்காமல் புறகணிக்கின்றனர், மேலும் தன்னை ராஜினாமா செய்ய அமைச்சர் நிர்பந்தம் செய்வதாக குற்றம் சாட்டினார். மக்கள் பிரதிநிதிகள் மாறி மாறி அரசியல் கால்புணர்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசியதை கேட்ட அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியையும், குழப்பமும் அடைந்தனர்.