சிங்கம்புணரியில் காலாவதியான பொருள்கள் பறிமுதல்

363பார்த்தது
சிங்கம்புணரியில் காலாவதியான பொருள்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையத்தின் முன் பகுதி, நான்கு முனை சந்திப்பு சாலை, பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரபாவதி தலைமையில் சிங்கம்புணரி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் உணவகங்கள், தேநீா், ரொட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
மொத்தம் 16 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனா். ரொட்டிக் கடையில் அதிக வண்ணம் கலந்த காலாவதியான இனிப்பு வகைகள் 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. அதிக வண்ணம் சோ்க்கக் கூடாது என 7 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவகம் ஒன்றில் 5 கிலோ பழைய புரோட்டாவை பறிமுதல் செய்தனா்.
உணவகங்களில் சோதனை செய்த அதிகாரிகள் சமையல் அறைகளில் சோதனை செய்தனா். மேலும், தூசு படிந்து காணப்பட்ட மேஜைகளை ஒரு வாரத்துக்குள் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு சுத்தப்படுத்தாத பட்சத்தில் கடுமையான அபதாரம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி