புளிய மரத்தின் மீது மோதி அரசு பேருந்து விபத்து

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வழியாக இன்று காலை காரைக்குடியில் இருந்து மதுரைக்கு 1 to 3, குளிர்சாதன பேருந்து (ஏசி பஸ்) தம்பிபட்டி என்ற இடத்தின் அருகே வளைவில் வந்து கொண்டிருக்கும்போது வாகனத்தின் ஸ்டேரிங் எதிர்பாராத விதமாக திடீரென லாக் ஆனதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் பலமாக மோதியது. இதில் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த நடத்துனர் மற்றும் நான்கு பயணிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயப்பட்டவர்களை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் காயம் அடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விரைவு பேருந்து தரத்தில் விரைவாகசெயல்படும் அரசு குளிர்சாதன பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுதல் கட்டணத்தோடு செயல்படும் குளிர்சாதனப் பேருந்து ஸ்டேரிங் லாக் ஆகும் அளவிற்கு முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டதா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி