நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி வேல்முருகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.