ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று (ஜன., 10) தொடங்குகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.