பொதுமக்கள் தங்களின் நிலம் சார்ந்த ஆவணங்களின் விவரங்களை கைப்பேசி வாயிலாக அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் நிலம் புவிசார் தகவல் - Tamil Nilam Geo Info" எனும் செயலியினை பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
தொடங்கி வைத்தார். சென்னை எழிலகத்தில் நேற்று (ஜன., 09) நடந்த நிகழ்வில் கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.