பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று (ஜன.09) முதல் தொடங்கியது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், "பொங்கல் பரிசுத்தொகுப்பை அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 2,20,94,585 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது.