ஷூ கயிரை கழுத்தில் இறுக்கி மாணவி தற்கொலை

70பார்த்தது
ஷூ கயிரை கழுத்தில் இறுக்கி மாணவி தற்கொலை
பள்ளியின் கழிவறையில் 16 வயது பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவின் மும்பை கோரேகானில் உள்ள சர்வதேச பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இடைவேளையின் போது கழிவறைக்கு சென்ற மாணவி ஷூ லேஸை கழுத்தில் கட்டி உயிரை மாய்த்துக் கொண்டார். விரிவான விசாரணைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மாணவியின் நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி