பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 90433 79664 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. மேலும், கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களை அணுகலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.